×

பெருமாநல்லூர் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்

 

அவிநாசி, நவ.17: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளுக்கு, திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில், ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வேல்குமார், சாமிநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரத்தினம்மாள் சிவசாமி, ஐஸ்வர்ய மஹராஜ், பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிடிசி வேலுச்சாமி, மற்றும் வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம், முன்னாள் சேர்மன் தங்கராஜ், பெருமாநல்லூர் சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், நிர்வாகிகள் அய்யாசாமி, அப்புசாமி, நவீன், சாமிக்கண்ணு, பழனிசாமி, ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post பெருமாநல்லூர் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Perumanallur panchayat ,Avinasi ,Tirupur North Assembly Constituency ,Tirupur Panchayat Union ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு-பரபரப்பு