×

கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைப்பு

 

அரியலூர்,நவ.17: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், (27). இவர் மீது மீன்சுருட்டி மற்றும் அரியலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களில் கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 21ம்தேதி குறுக்கு ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த போது, அரியலூர் மதுவிலக்கு அமல்பிரிவில் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அரியலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் புதுக்கோட்டை இன்றியமையா பொருட்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் தண்டபாணி பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மேல்பரிந்துரையினை ஏற்று, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஸ்ரீராம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படி தடுப்புக்காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீராம், குண்டர் சட்டத்தின்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy Jail ,Ariyalur ,Sriram ,Vennanguzhi Keezatheru ,Udayarpalayam circle ,Ariyalur district ,Trichy ,
× RELATED ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது...