×

குளித்தலை அருகே ரயிலில் பயணித்தவர் தவறி விழுந்து சாவு

 

திருச்சி,நவ.17:குளித்தலை அருகே ரயிலில் பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார். திருச்சியில் இருந்து ஈரோடு சென்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குளித்தலை பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே, ரயிலில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே எஸ்.எஸ்.ஜ பாலமுருகன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில் இறந்தவர் சமையல் தொழிலாளி என கூறப்படுகிறது. இதுகுறித்த குறித்த தகவல் தெரிந்தவர்கள் 9942522477, 9498101978 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி ரயில்வே போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post குளித்தலை அருகே ரயிலில் பயணித்தவர் தவறி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Trichy ,Erode ,Dinakaran ,
× RELATED குளித்தலை கிராமப்புற மாலை நேரக்கல்வி...