×

தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான தடை நீக்கம்: அன்புமணி வரவேற்பு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உருவாகியுள்ளன. அதற்காக அந்த மாநில அரசுகளை ஒன்றிய அரசும், மருத்துவ ஆணையமும் பாராட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டுப்பாடு விதித்து தண்டிக்கக்கூடாது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.

எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 லட்சம் பேருக்கு அதிக அளவாக 100 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற ஆணைக்கு ஓராண்டுக்கு மட்டுமின்றி நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் அமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான தடை நீக்கம்: அன்புமணி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : southern states ,Anbumani ,CHENNAI ,BAMA ,president ,Tamil Nadu government ,
× RELATED கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை...