×

ஆவின் டிலைட் பால் பழைய விலைக்கே விற்பனை: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தமிழக ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு, தினசரி 33700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொது மக்கள் பயன் பெறும் வகையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வகை பசும்பால் 200 மி.லி டிலைட் எனும் பெயரில் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால், நிறை கொழுப்பு பால் மற்றும் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகளை அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.இவ்வாறு ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆவின் டிலைட் பால் பழைய விலைக்கே விற்பனை: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Aavin ,Chennai ,Tamil ,Nadu ,Aavin administration ,Tirunelveli Cooperative Milk Producers Union ,Aavin Delight ,Dinakaran ,
× RELATED ஆவின் பாலகத்தில் இருந்த ஆங்கில பெயர் பலகை தமிழில் மாற்றம்