×

தேசிய பத்திரிகை தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி: உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர். எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தேசிய பத்திரிகை தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,National Journalism Day ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...