×

நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் திடீர் கோளாறு: 1.15 மணி நேரம் தாமதம்

நெல்லை: சபரிமலை சீசனையை ஒட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க வியாழன் தோறும் டிச.28ம் தேதி வரை வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, நெல்லையில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட தயாரான வந்தே பாரத் சிறப்பு ரயிலில் சக்கரங்களுடன் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில் புறப்பட முடியாமல் சிக்கல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த வந்தே பாரத் ரயில் தொழில்நுட்ப பொறியாளர்கள், ஊழியர்கள் உடனடியாக வந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கோளாறை சரி செய்தனர். அதைத் தொடர்ந்து 1.15 மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு இந்த ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது.

The post நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் திடீர் கோளாறு: 1.15 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Nellai-Chennai ,Nellai ,Sabarimala ,Dinakaran ,
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...