×

ஊட்டியில் 10 புலிகள் இறந்த விவகாரம் பெங்களூரு சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் விசாரணை

ஊட்டி: பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோசப் ஓவர். இவர் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பு தலைவராகவும் உள்ளார். கடந்த செப்டம்பரில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 புலிகள் மர்மமான முறையில் இறந்தன. இதில், 4 புலிக்குட்டிகள் இறந்தது தொடர்பாகவும், அதன் தாய் புலி எங்கு சென்றது, அது வேறு பகுதிக்கு சென்றதா? அல்லது கொல்லப்பட்டதா? என்பது குறித்து ஏன் வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை என ஜோசப் ஓவர் கடந்த செப்டம்பர் 17ம் தேதி தனது பேஸ் புக் மற்றும் எக்ஸ் பக்கங்களில் கட்டுரை வெளியிட்டிருந்தார்.

இந்த கட்டுரையை படித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் வனத்துறையினரிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக ஜோசப் ஓவருக்கு வனத்துறை சம்மன் அனுப்பியது. பெங்களூரில் உள்ளதால், என்னிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஜோசப் ஓவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும். எனவே, உடனடியாக நேரில் ஆஜராக வேண்டும் என வனத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, நேற்று ஜோசப் ஓவர் ஊட்டியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், துணை இயக்குநர் அருண் விசாரணை நடத்தினார்.

The post ஊட்டியில் 10 புலிகள் இறந்த விவகாரம் பெங்களூரு சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,JOSEPH OVER ,Integrated Environmental Organization ,
× RELATED 3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை...