×

அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலனை: கே.பி.முனுசாமி பேட்டி

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை எவ்வித வரலாறும் தெரியாமல் பேசி வருகிறார்.

அவருக்கு நாவடக்கம் தேவை. ஓ.பன்னீர் செல்வம் அரசியலில் இருந்து காணாமல் போனவர். அவரைக் குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஒருவேளை அவர் மன்னிப்பு கடிதம் வழங்கும் பட்சத்தில் அந்த நேரத்தில் தலைமை அதனை பரிசீலனை செய்யும். தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் உள்ளது. அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலனை: கே.பி.முனுசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,OPS ,KP Munusamy ,Ranipet ,AIADMK ,Ranipet West District ,Ranipet Karai Kootrodu ,Dinakaran ,
× RELATED மிகப்பெரிய ஆட்கள் பாஜகவுக்கு...