×

மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்: மின் வாரியம் தகவல்

சென்னை: மழைக்காலங்களில் மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பிலும் தெரிவிக்கலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கி பருவமழை தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்க மின் வாரிய பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செயற்பொறியாளர்களை எந்தநேரம் அழைத்தாலும் பிரச்னை குறித்து உடனடியாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு மின்னகம் தவிர வாட்ஸ் அப்பிலும் புகாரிளிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை வடக்கு-94440 99255, மத்திய சென்னை-94458 50739, சென்னை மேற்கு- 94983 78194, சென்னை தெற்கு 1- 91500 56672, சென்னை தெற்கு 2-91500 56673, செங்கல்பட்டு- 91500 56675, காஞ்சிபுரம்- 91500 56674 ஆகிய வாட்ஸ் அப் எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

The post மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்: மின் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Power Board ,CHENNAI ,electricity board ,Northeast ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED புதிதாக மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு...