×

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் மெத்வதேவ்

டுரின்: உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களுக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி இந்த ஆண்டு இத்தாலியின் டுரின் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 9 வீரர்கள் முறையே 5, 4 வீரர்களை கொண்ட 2 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒற்றையர்களுக்கான பச்சை பிரிவில் உலகின் நெம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்(செர்பியா), ஜானிக் சின்னர்(இத்தாலி), ஹோல்கர்(டென்மார்க்), ஹர்கரஸ்(போலந்து), சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோரும், சிவப்பு பிரிவில் மெத்வதேவ், ருபலேவ்(ரஷ்யா), ஸ்வெரவ்(ஜெர்மனி), அல்கராஸ்(ஸ்பெயின்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். டுரினில் 2வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் சிவப்பு பிரிவில் உள்ள ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ்(27வயது, 3வது ரேங்க்), ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(26வயது, 7வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.

அதில் மெத்வதேவ் 7-6(9-7), 6-4 என நேர் செட்களில் ஸ்வெரவை வீழத்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி 45நிமிடங்கள் நடந்தன. இதன் மூலம் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்துள்ள மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. எஞ்சியுள்ள 3வது சுற்று ஆட்டத்தில் மெத்வதேவ் இன்று ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ்(20வயது, 2வது ரேங்க்) உடன் மோதுகிறார். கார்லோஸ் தலா ஒரு வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளார். இரட்டையர் சிவப்பு பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை களமிறங்கி உள்ளது. இவர்கள் தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் 3வது இடத்தில் உள்ளனர். எஞ்சிய ஒரு ஆட்டத்தில் இன்று வெஸ்லி கூல்ஹஃப்(நெதர்லாந்து), நீல் குப்ஸ்கி(பிரிட்டன்) இணையுடன் மோத உள்ளது. அதில் வென்றால் போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேறலாம்.

The post ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் மெத்வதேவ் appeared first on Dinakaran.

Tags : ATP Finals ,Medvedev ,Turin ,Turin, Italy ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்