×

மயிலாடும்பாறை அருகே சர்க்கரைக் கொல்லி மூலிகை சேகரிக்கும் மலைவாழ் மக்கள்: கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்பனை

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே, சர்க்கரைக் கொல்லி மூலிகை இலைகளை சேகரிக்கும் பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கிலோ ரூ.80 முதல் 100 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள உப்புத்துறை, ஆட்டுப்பாறை, நொச்சிஓடை, கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூலிகையான சர்க்கரை கொல்லி மூலிகையை வனப்பகுதியில் சேகரித்து வருகின்றனர். இந்த இலைகளை உலர்த்தி, கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்கின்றனர். இதை கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் நேரடியாக வருகின்றனர். ஆனால், விலை போதுமானதாக இல்லாததால் அன்றாட வயிற்றுப்பிழைப்பிற்கு கஷ்டப்படுவதாக தெரிவிக்கின்றனர். தினசரி காலை 6 மணிக்கு வனப்பகுதி செல்லும் மழைவாழ் மக்கள் மாலை 6 மணி வரை மூலிகை இலைகளை சேகரிக்கின்றனர். மேலும், வனப்பகுதியில் செல்லும்போது வனத்துறை அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து மலைவாழ் மக்கள் தலைவர் முருகன் கூறுகையில், ‘மலைகளில் வாழும் நாங்கள் தேனெடுத்தல், கிழங்கு பறித்தல், மூலிகை பறித்தல் ஆகிய பணிகளில் நான்கு தலைமுறையாக ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு வனத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்….

The post மயிலாடும்பாறை அருகே சர்க்கரைக் கொல்லி மூலிகை சேகரிக்கும் மலைவாழ் மக்கள்: கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Mayilatumparai ,Varusanadu ,Mayiladumparai ,Mayiladumpara ,Dinakaran ,
× RELATED வருசநாடு பகுதியில் சீசன் தொடக்கம்...