×

செல்போனை ஹேக் செய்த மர்மநபர்கள்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிக்கு பெண்ணின் நிர்வாண வீடியோ அனுப்பி மிரட்டல்

பெங்களூரு: தமிழக காங்கிரஸ் கட்சி செயல்தலைவரின் செல்போனை ஹேக் செய்து பெண்ணின் நிர்வாண வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய மர்மநபர்கள் குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் (45). பெங்களூரு பழைய விமானநிலைய சாலை கொடிஹள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கடந்த 11ம் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், முந்தைய நாள் தனது செல்போனின் வாட்ஸ்அப் வீடியோ கால் பெல் அடித்தது. யார் அழைக்கிறார் என பார்க்க எடுத்தபோது, அதுவாகவே ஆன் ஆகியது.

அடுத்த சில நொடிகளில் திரையில் ஒரு பெண் நிர்வாணமாக தோன்றினார். உடனே போனை ஆப் செய்துவிட்டேன். அதன்பின், எனது மொபைலில் சமூக வலைதள கணக்கில் இருக்கும் புகைப்படங்களை மர்மநபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். எனவே எனது போனை ஹேக் செய்து, மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கூறியிருக்கிறார்.

இப்புகார் பற்றி பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் செயல்தலைவர் மோகன்குமாரமங்கலத்தின் செல்போனை ஹேக் செய்தது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியை சேர்ந்தவர்கள் எனத்தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செல்போனை ஹேக் செய்த மர்மநபர்கள்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிக்கு பெண்ணின் நிர்வாண வீடியோ அனுப்பி மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,Bengaluru ,Tamil Nadu Congress party ,
× RELATED பொருளாதார நிபுணர் ஆனந்த்...