நெல்லை: இயந்திர கோளாறு காரணமாக நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கடந்த ஒரு மணி நேரமாக நெல்லை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. நெல்லை வந்தே பாரத் ரயிலானது செப்டம்பர் 24ம் தேதி நெல்லையிலிருந்து சென்னைக்கு தொடங்கிவைக்கப்பட்டது. தினசரி காலை 6 மணிக்கு நெல்லையிலிருந்தும். மறுமார்கமாக சென்னையிலிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை வந்தடையும்.
இந்த நிலையில் இன்றையிலிருந்து புதியதாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்தது. வந்தே பாரத் சிறப்பு ரயில்களுக்கான சிறப்பு முன்பதிவுகளும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 3 மணி அளவில் நெல்லையிலிருந்து சென்னைக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏராளமானோர் பதிவு செய்து ரயிலில் பயணம் செய்ய ஆயுத்தமானார்கள். ஆனால் வந்தே பாரத் சிறப்பு ரயிலில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதினால் 3 மணிக்கு புறப்பட வேண்டிய ரயிலானது 4.20 வரை புறப்படாமல் நெல்லை ரயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வந்தே பாரத் ரயிலில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகவும் அதனை சரி செய்யும் முயற்சியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த ரயிலானது மிகவும் மெதுவாக நெல்லை ரயில்வே நிலையத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றி கொண்டு செல்லப்படுகிறது இன்ஜினில் பழுதானது முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்றும் கோவில்பட்டி போன்ற இடங்களில் நிறுத்தி வைத்து மீன்டும் அந்த இஞ்சினை ஒரு முறை பரிசோதனை செய்த பின்புதான் அது முழு வேகத்தில் செல்லும் எனவும் இங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post வந்தே பாரத் ரயிலில் எஞ்சின் கோளாறு: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டதால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.
