×

உத்தரகாண்ட் சுரங்க விபத்து; 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 5வது நாளாக தீவிரம்

டேராடூன்: உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு-பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப்பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு-பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 5வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. சுமார் 96 மணி நேரத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் 40 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இடிபாடு நிகழ்ந்த இடத்தில் மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உதவியுடன் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post உத்தரகாண்ட் சுரங்க விபத்து; 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 5வது நாளாக தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand mine accident ,Dehradun ,Silkyara Bend-Bargat ,Uttarakhand ,Yamunotri ,Chardam ,Uttarakhand… ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் வன்முறை தொடர்பாக...