×

வடக்கு ரயில்வேயில் நடைபெற உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜன,, பிப்-ல் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து..!!

2024 ஜனவரி,பிப்.ல் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து

டெல்லி: வடக்கு ரயில்வேயில் நடைபெற உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜன,, பிப்-ல் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக்ரா கோட்டத்தில் மதுரா ரயில் நிலையம், மதுரா – பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில்பாதை, சிக்னல் பணிகள் நடைபெறவுள்ளன. 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2-ல் குமரியில் இருந்து புறப்பட வேண்டிய நிஜாமுதீன் திருக்குறள் ரயில், ஜன.14, 16, 21, 23, 28, 30 மற்றும் பிப். 4-ல் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய நிஜாமுதீன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி.10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய (12687) சண்டிகர் விரைவு ரயில் ரத்து. ஜனவரி . 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து புறப்பட வேண்டிய {16787) வைஷ்ணவி தேவி கட்ரா ரயில் ரத்து.

2024ஜன.,பிப்.-ல் டெல்லியிலிருந்து வரும் ரயில்ரத்து

மறுமார்க்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் டெல்லியிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜன. 13, 15, 20, 22, 27, 29 மற்றும் பிப்.3, 5-ல் டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய குமரி திருக்குறள் ரயில் ரத்து. ஜனவரி. 16, 18, 23, 25, 30 மற்றும் பிப். 1, 6-ல் டெல்லியிலிருந்து புறப்படும் நிஜாமுதீன் மதுரை விரைவு ரயில் ரத்து. ஜன.15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில், ஜன. 11, 18, 25, மற்றும் பிப். 1 ஆகிய தேதிகளில் வைஷ்ணவி தேவி கட்ராவிலிருந்து புறப்படும் நெல்லை விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post வடக்கு ரயில்வேயில் நடைபெற உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜன,, பிப்-ல் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Northern Railway ,Dinakaran ,
× RELATED டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள்...