×

ராஜஸ்தான் தேர்தலில் பரப்புரை செய்த அசாம் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை!!

ராஜஸ்தான்: ராஜஸ்தான் தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட அசாம் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய திரிணாமுல் காங்., ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. அசாம் ஆளுநர் குலாப்சந்த் கட்டாரியா, ராஜஸ்தான் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஜனாதிபதி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு அசாம் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க இரு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளது. ஆளுநரின் செயல், ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள சவால், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.எம்.சி. தெரிவித்துள்ளது.

 

The post ராஜஸ்தான் தேர்தலில் பரப்புரை செய்த அசாம் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Assam Governor ,Rajasthan ,Trinamul Cong ,Atmi ,
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு