×

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா!

திருப்பூர்: தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா செய்தார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ,ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ராஜினாமா செய்தியில்; இப்பவும் எனது சொந்த வேலை காரணமாக நமது சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்.

இதுகாறும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தீபாவளி முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. இதில் தமிழகத்தில் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டதால் தமிழ்நாடு அரசு ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் என காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 1:30 மணிக்கு முடிக்க அனுமதி வழங்கி இருந்தது.

இந்த சூழலில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு சொந்தமான திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் சல்மான் கானின் டைகர் திரைப்படம் அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் வந்த நிலையில், அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர். அதில் அனுமதி இன்றி ஆறு காட்சிகள் திரையிடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திரையரங்கின் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா! appeared first on Dinakaran.

Tags : Tiruppur Subramaniam ,Tamil Nadu Theatre and Multiplex Owners Association ,Tiruppur ,Tamil Nadu ,President ,Dinakaran ,
× RELATED பிரதமர் திருப்பூர் வருகையை...