×

உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரையிறுதி போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு!

கொல்கத்தா: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் 4வது இடத்தை பிடித்த நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தன. நேற்று முதல் அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் குயின்டன் டி காக் 3 ரன், டெம்பா பாவுமா 0 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

 

The post உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரையிறுதி போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு! appeared first on Dinakaran.

Tags : WORLD CUP CRICKET 2ND SEMI-FINAL ,SOUTH AFRICAN ,KOLKATA ,WORLD CUP CRICKET SERIES ,World Cup Cricket 2nd ,Dinakaran ,
× RELATED தென்ஆப்ரிக்க டி.20 தொடர் பைனல்: சூப்பர்...