×

தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி!

சென்னை: தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் சங்கரய்யா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார்.

அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் சங்கரய்யாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

The post தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Health Minister ,M. Subramanian ,Comrade Sankaraiah ,Chennai ,Tamil Nadu ,M.Subramanian ,Dinakaran ,
× RELATED வேலைக்காக வெளிநாடு செல்லும்...