×

நூறுநாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் கூலி வழங்க கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் சார்பில் நூறுநாள் வேலை சம்பளம் வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரதிநகர் தேசிய வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் காருகுடி சேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் நூறுநாள் வேலை திட்டத்தில் பல மாதங்களாக கூலி வழங்காததால் தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ராணுவத்தினர் அணி தலைவர் கோபால், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாணி இப்றாகீம், முன்னாள் காவல் ஆய்வாளர் கொழுவூர் முருகேசன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஒபிசி அணி மாவட்ட தலைவர் பாஸ்கரசேது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post நூறுநாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Congress party ,Ramanathapuram District Congress ,Dinakaran ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை...