×

ஊராட்சி சேவை மையத்தில் தரைத்தளத்தை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை: திருவாடானை அருகே சேதமடைந்த கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே ஓரிக்கோட்டை பகுதியில் கடந்த 2015-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு ஓரிக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தின் நுழைவு வாயிலின் வட பகுதி பக்கவாட்டுச் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

The post ஊராட்சி சேவை மையத்தில் தரைத்தளத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panchayat Service Center ,Thiruvadanai ,Dinakaran ,
× RELATED திருவாடானையில் வாரச்சந்தை பகுதியில் பேவர்பிளாக் அமைப்பு