×

இரண்டாம் சீசன் நிறைவு எதிரொலி தாவரவியல் பூங்காவில் 30 ஆயிரம் தொட்டிகளில் அலங்காரம் அகற்றம்

ஊட்டி: இரண்டாம் சீசன் நிறைவு அடைந்ததை தொடர்ந்து, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக தாவரவியல் பூங்காவில் 30 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள் அகற்றப்பட்டன. நாள் தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் வைக்கப்படுகிறது. மேலும், மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

The post இரண்டாம் சீசன் நிறைவு எதிரொலி தாவரவியல் பூங்காவில் 30 ஆயிரம் தொட்டிகளில் அலங்காரம் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Echo Botanic Gardens ,Ooty ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...