×

மதுபோதையில் டிரைவர் பலி

ஈரோடு: ஈரோடு, திருநகர்காலனி, சுப்பையா வீதியை சேர்ந்தவர் மணி(52). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார். திருமணமாகாத விரக்தியில் மதுபோதைக்கு அடிமையான மணி தினமும் குடித்து விட்டு வீட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூலப்பட்டறை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பாக குடிபோதையில் மயங்கி கிடந்தவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

The post மதுபோதையில் டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Mani ,Subbiah Street, Thirunagarkalani, Erode ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்