×

தனியார் நிறுவனம் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்

திருவண்ணாமலை, நவ.16: தீபாவளி சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்ட செய்யாறு, ஆரணி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர். திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், புதன்கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஏடிஎஸ்பிக்கள் சைபர் கிரைம் எம்.பழனி, குற்றத்தடுப்புப் பிரிவு ஆர்.சவுந்தராஜன், தலைமையிடம் சிவனுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, சொத்து பிரச்னை, பாகப்பிரிவினை தகராறு ஆகியவற்றை தீர்க்கக்கோரியும், போலீஸ் ஸ்டேஷன்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், தனியார் நிறுவனம் நடத்திய தீபாவளி சீட்டு மோசடியில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட செய்யாறு, ஆரணி பகுதிகளை சிலர், குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர். அப்போது, சேமிப்பு தொகையை தவறாமல் செலுத்தியதற்கான ஆதாரங்களை அளித்து, அவற்றை திரும்பப் பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்தனர். நேற்று நடந்த கூட்டத்தில் 27 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

The post தனியார் நிறுவனம் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Thiruvannamalai ,Seyyar ,Arani ,SP ,
× RELATED திருவண்ணாமலையில் கோரிக்கைகளை...