×

குலசேகரன்பட்டினத்தில் புத்தக வாசிப்பு பயிற்சி முகாம்

உடன்குடி, நவ. 16: குலசேகரன்பட்டினம் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் குலசேகரன்பட்டினம் புனித ஜோசப் சேவியர் ஆர்சி தொடக்கப்பள்ளியில் புத்தக வாசிப்பு பயிற்சி சிறப்பு முகாம் நடந்தது. கிளை நூலக அலுவலர் மாதவன் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியை லில்லி வரவேற்றார். தொழிலதிபர் முருகன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி 50 மாணவ, மாணவியருக்கான நூலக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.1000 செலுத்தினார். நிகழ்ச்சியில் வாசகர் வட்ட அலுவலர் சுடலைமணி, பள்ளி ஆசிரியர்கள் ஹெர்மஸ், பிரமிளா, ஜாஸ்மின், பீம்ரோஸ், பிரிட்டா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

The post குலசேகரன்பட்டினத்தில் புத்தக வாசிப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpatnam ,Udengudi ,St. Joseph Xavier RC ,Kulasekaranpatnam Government Branch Library Readers Circle ,Dinakaran ,
× RELATED குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில்...