×

ஆலங்குளம் அருகே தொழிலாளி மாயம்

ஆலங்குளம்,நவ.16: ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஆறுமுகம் என்றஅருள் (41). இவருக்கு வனிதா (36) என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின் றனர். இவர்கள் குடும்பத்துடன் தீபாவளிக்கு ஊருக்கு வந்தனர். தீபாவளியன்று ஆறுமுகம் வீட்டிலிருந்தபோது அவரது நண்பர்கள் சிலர் மது குடிப்பதற்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து அவரது மனைவி வனிதா ஆலங்குளம் போலீசில் தனது கணவரை மீட்டு தருமாறு புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை அழைத்து சென்ற நண்பர்களிடம் விசாரணை நடத்தி பல்வேறு கோணங்களில் தேடி வருகின்றனர்.

The post ஆலங்குளம் அருகே தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Aramugam ,Ramasamy ,Guruvankot ,Vanita ,
× RELATED ஆலங்குளத்தில் போலீசுக்கு அரிவாள் வெட்டு