×

தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது

பள்ளிபாளையம், நவ.16: பள்ளிபாளையம் அடுத்துள்ள தெற்குபாளையத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர், விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக கிழக்குகரை கிளைக் கால்வாய் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச்சேர்ந்த ஜெயக்குமார்(42), ஒட்டமெத்தையை சேர்ந்த சங்கர்(42) ஆகியோர், ரவிசங்கரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ரவிசங்கர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ₹500ஐ கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து தப்பி வந்து பள்ளிபாளையம் போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். இருவர் மீதும் கொலை முயற்சி, வழிப்பறி ஆகிய வழக்குகள் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

The post தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Ravi Shankar ,South Palayam ,Dinakaran ,
× RELATED ஆவத்திபாளையம் ஓடைக்குள் திறந்துவிடப்படும் சாயக்கழிவுகள்