×

சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மரணம்

லக்னோ: இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவரான சுப்ரதா ராய்(75) மாரடைப்பு காரணமாக காலமானார். புகழ் பெற்ற தொழிலதிபர், சகாரா குழுமங்களின் தலைவர் சுப்ரதா ராய் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மும்பையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். 1978ல் வெறும் 2,000 ரூபாயில் சகாரா சீட்டு நிறுவனத்தை தொடங்கி, பின்னர் அதனை சகாரா இந்தியா பரிவார் என மாற்றி, இந்தியாவின் மிகப்பெரிய சீட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியவர் சுப்ரதா ராய். விதிகளை மீறி ரூ.24,000 கோடி திரட்டிய வழக்கில் அவர் 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மரணம் appeared first on Dinakaran.

Tags : Sahara Group ,Subrata Rai ,Lucknow ,India ,Subrata Roy ,Sakara Group ,Dinakaran ,
× RELATED காவலர் எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது