×

சில்லி பாயிண்ட்

* நடப்புத் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா134 ரன் வித்தியாசத்தில் ஆஸி.யை துவம்சம் செய்தது.

* உலக கோப்பையில் 7 முறை மோதியதில் 3-3 என சமநிலை வகிக்கின்றன (ஒரு ஆட்டம் சரிசமன் ‘டை’). 1999 அரையிறுதியில் ஆஸி 49.2 ஓவரில் 213 ரன்; தென் ஆப்ரிக்கா 49.4 ஓவரில் 213 ரன். ஆட்டம் டை ஆனாலும் ஆஸி. பைனலுக்கு முன்னேறியது.

* ஈடன் கார்டனில் நடந்த 35 ஒருநாள் போட்டிளில் முதலில் பேட் செய்த அணி 21லும், சேஸ் செய்த அணி 13லும் வென்றுள்ளன (ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது).

* கொல்கத்தாவில் இதுவரை தென் ஆப்ரிக்கா 5, ஆஸி. 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளன.

* தெஆ இங்கு விளையாடிய 4 ஆட்டங்களில் இந்தியாவுடன் மோதியதில் இந்தியா 3லும், தென் ஆப். ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன. அயர்லாந்துக்கு எதிரான (2011) ஆட்டத்தில் தென் ஆப். 131 ரன் வித்தியாசத்தில் வென்றது.

* நடப்புத் தொடரில் இங்கு 2வது முறையாக தென் ஆப்ரிக்கா களமிறங்குகிறது. நவ.5ல் நடந்த 37வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் 243 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

* இந்த அரங்கில் 2 முறை இந்தியாவை எதிர்த்த ஆஸி. 2003 உலக கோப்பை பைனலில் 37 ரன்னில் வெற்றியும், மற்றொரு ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

நேருக்கு நேர்…

* இரு அணிகளும் 109 முறை மோதியுள்ளதில் தென் ஆப்ரிக்கா 55-50 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் முடிவை எட்டவில்லை, 3 ஆட்டம் ரத்து).

* பொதுவான மைதானங்களில் நடந்த 17 ஆட்டங்களில் ஆஸி. 9-8 என முன்னிலை பெற்றுள்ளது.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா 4-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. செப்டம்பரில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆஸி. 123 ரன் வித்தியாசத்தில் வென்றது. அதன் பிறகு உலக கோப்பை லீக் ஆட்டம் வரை நடந்த 4 ஆட்டங்களிலும் முறையே 111, 164, 122, 134 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவே வென்றுள்ளது.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Silly Point ,South Africa ,Aussies ,Silly ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…