×

‘பெரியாறு அணை பலமாக உள்ளது’

கூடலூர்: பெரியாறு அணையில் துணை குழு நேற்று ஆய்வு செய்தது. பின்னர், தமிழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘அணையில் உள்ள 13 மதகுகளில் 2, 4 மற்றும் 5வது மதகின் இயக்கம் சரி பார்க்கப்பட்டது. அதுபோல் சீப்பேஜ் வாட்டர் (கசிவு நீர்) அளவு 62 லிட்டர் என தற்போதைய நீர்மட்டத்திற்கு மிக துல்லியமாக இருந்தது. இதனால் அணை மிகுந்த பலத்துடன் உள்ளது என துணைக்குழுவினர் திருப்தி தெரிவித்துள்ளனர்’’ என்றனர்.

The post ‘பெரியாறு அணை பலமாக உள்ளது’ appeared first on Dinakaran.

Tags : Periyar dam ,Kudalur ,Tamil Nadu ,Periyaru ,Dinakaran ,
× RELATED பந்தலூர், கூடலூர் வட்டாரத்தில் ரேஷன்...