×

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

கராச்சி: பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நிலநடுக்க மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இன்று அதிகாலை 5.35 மணியளவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் நவம்பர் 11ம் தேதி 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இலங்கையின் கொழும்பில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை இரவு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தானில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : in ,Pakistan ,Karachi ,National Earthquake Center ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது