×

கோயில் உண்டியல் பணம் விதிப்படியே எண்ணப்படுகிறது: தமிழக அரசு

சென்னை: கோயில் உண்டியல் பணம் விதிகளின் படியே எண்ணப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுக்களை அமைக்க உத்தரவிடக் கோரி ரங்கராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. கோயில் அறங்காவலர் குழு தலைவர், செயல் அலுவலர், பொதுமக்கள் முன் உண்டியல்கள் திறக்கப்படுகிறது. உண்டியல்கள் திறக்கப்பட்டு அதன் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. உண்டியல் திறப்பை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய கோயில்களில் உண்டியல் திறப்பு, எண்ணிக்கை ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

The post கோயில் உண்டியல் பணம் விதிப்படியே எண்ணப்படுகிறது: தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu Government ,
× RELATED அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார்...