×

சங்கரய்யாவின் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்

சென்னை: சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் மறைவுக்கு நடிகரும் சமக நிறுவனத் தலைவருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தன் வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறையில் அடைபட்டு துன்புற்ற வரலாற்று போராளியான சங்கரய்யா அவர்கள், 3 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்து தமிழக அரசியல் வரலாற்றில் தனித்தடம் பதித்து மறைந்துள்ளார். சமூகநலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி இறுதி வரை சேவை செய்த தகைசால் தமிழரின் புகழ் நீடித்து நிலைபெறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post சங்கரய்யாவின் மறைவுக்கு சரத்குமார் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Sarathkumar ,Sankaraya ,Chennai ,Samaka Institute ,President ,
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....