×

சம்பள நிலுவை தொகை வழங்க கேட்டு தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

கூடலூர் : சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பகுதியில் உள்ள தனியார் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடி தொழிற்சங்க தலைவர் விஜயன் தலைமையில் தோட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான பழைய பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தோட்ட நிர்வாகம் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய சம்பள பாக்கி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், மாத சம்பளத்தை முறையாக அந்தந்த மாதத்தில் வழங்குவதோடு, தொழிலாளர்களுக்கான பண பயன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் மேலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post சம்பள நிலுவை தொகை வழங்க கேட்டு தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Devar Solai ,Dinakaran ,
× RELATED அனைத்து சிறு தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க கோரிக்கை