×

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி மாமா, மருமகள் பலி

*பரமக்குடியில் பரிதாபம்

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, பாரதி நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (38). இவரது சகோதரி மகள் பிரியதர்ஷினி (7). இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், பரமக்குடி ஐந்து முனைச்சாலை அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்கியுள்ளனர். பின்னர் பாண்டியராஜன், பிரியதர்ஷினியில் கையைப் பிடித்துக் கொண்டு, சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது வேகமாக வந்த கார், இருவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்கு போராடிய பிரியதர்ஷினியை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பரமக்குடி போலீசார், பாண்டியராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, கார் டிரைவர் ஞானவேலை கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி மாமா, மருமகள் பலி appeared first on Dinakaran.

Tags : Parithapam ,Paramakkudi Paramakkudi ,Pandiyarajan ,Bharati Nagar, Ramanathapuram district ,
× RELATED விருந்து வைப்பதற்காக மறுவீடு அழைத்து...