×

கொட்டித் தீர்த்த கனமழை.. சென்னையில் தேங்காத மழைநீர்.. சாதித்து காட்டிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு!!

சென்னை : சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு இன்று மஞ்சள் நில எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 8.30 மணி அளவில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 19 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 10 செ.மீ., மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 9.4 செ.மீ., கோடம்பாக்கத்தில் 8.5 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், மிக கனமழை பெய்த போதும் சென்னையில் எந்த இடத்திலும் மழைநீர் தேங்கவில்லை.விடிய விடிய மழை பெய்த போதிலும் சென்னையில் காலையில் இயல்பு நிலை உள்ளது.மு.க.ஸ்டாலின் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மிக கனமழை பெய்த போதும் மழைநீர் உடனுக்குடன் வடிந்தது.

கடந்த காலங்களில் சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சுரங்கப் பாதைகள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும். ஆனால் இன்றும் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் எந்த சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும் மழையால் சரிந்த 12 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில் 31 இடங்களில் தண்ணீர் முழுமையாக வடிந்தது.திமுக அரசு பொறுப்பேற்றதும் மழை பாதிப்புகளை தடுக்க ஐஏஎஸ் திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தியதால் நேற்று கனமழை பெய்த போதும் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொட்டித் தீர்த்த கனமழை.. சென்னையில் தேங்காத மழைநீர்.. சாதித்து காட்டிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,M.P. K. ,Dima government ,Stalin ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...