×

தரமற்ற 42 கிேலா இனிப்பு வகைகள் பறிமுதல் 12 கடைகளுக்கு நோட்டீஸ் ேவலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்

ேவலூர், நவ.15: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 42 கிலோ தரமற்ற இனிப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 12 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, மாதிரிகள் சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து ஸ்வீட் மற்றும் பேக்கரி, தீபாவளி பலகாரம் செய்யும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் மாவட்ட உணவுபாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 3 மாவட்டங்களில் மொத்தம் 150 கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் தரமற்ற இனிப்பு வகைகள் 42 கிலோ பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தரமற்ற எண்ணெய் 6 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர். விதிமீறிய கடைகளுக்கு ₹12ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தரமற்ற இனிப்பு மாதிரிகள் 3 மாவட்டங்களிலும் சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட கடைகளில் 12 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்தவுடன் தரமற்ற இனிப்பு விற்பனைக்கு வைத்திருந்த கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தரமற்ற 42 கிேலா இனிப்பு வகைகள் பறிமுதல் 12 கடைகளுக்கு நோட்டீஸ் ேவலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Tags : Yevalur, Tirupattur, Ranipet districts ,Vellore ,Vellore, ,Tirupattur ,Ranipet districts ,Dinakaran ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...