×

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது குண்டு பாய்ந்து ஒருவர் பலி விவகாரம்

செங்கம், நவ.15: ஜவ்வாது மலையில் வனவிலங்கு வேட்டையாட சென்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த விவகாரத்தில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை தாலுகா தென்மலை அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சக்திவேல்(26). இவர் ஈச்சங்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றபோது கடந்த 11ம் தேதி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் இந்திராணி புதுப்பாளையம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பது, அனுமதி இன்றி வனப்பகுதியில் நுழைவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரவி(36), பிரகாஷ்(30) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். அவர்கள் அனுமதியின்றி வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சந்திரன்(58) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது குண்டு பாய்ந்து ஒருவர் பலி விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Sengam ,Javvadu Hill ,
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் செங்கம் பஜார் வீதியில்