×

மதுபோதையில் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி

 

வருசநாடு, நவ. 15: வருசநாடு அருகே வாய்க்கால்பாறை கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரின் மகன் சிதம்பரம் (24). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் மது குடித்து விட்டு போதையில் கோவில்பாறை வழியாக செல்லும் குறுக்கு பாதையில் வாய்க்கால்பாறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த பாதையின் குறுக்கே யானைகெஜம் ஆறு செல்கிறது. கன மழையின் காரணமாக தற்போது யானைகெஜம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் இருந்த சிதம்பரம் பாறைகளை மிதித்து ஆற்றை கடந்து செல்ல முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பாறையில் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சிதம்பரம் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியானார். இந்த தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக கடமலைக்குண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுபோதையில் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Chidambaram ,Rasu ,Vaikkalparai ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால்...