×

தீபாவளி பட்டாசு குப்பைகள் அகற்றும் பணி மும்முரம்

 

கறம்பக்குடி, நவ.15: கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் தீபாவளி பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சி யில் 15 வார்டுகள் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 வார்டு பகுதிகள் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பட்டாசுகளை பல இடங்களில் வெடித்து பொதுமக்கள் மகிழ்ந்தனர்.இதனால் பல இடங்களில் பட்டாசு கழிவு குப்பைகள் சேர்ந்தன. இதையடுத்து பேரூராட்சி தலைவர் முருகேசன் உத்தரவு மற்றும் கவுன்சிலர்களின் அறிவுறுத்தலின்படி பேரூராட்ச தூய்மை பணியாளர்கள் நேற்று அதிகாலை முதல் பட்டாசு கழிவு குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர் குறிப்பாக வியாபார வர்த்தக இடங்களான உள்கடை வீதி, டோல்கேட் வீதி, புதுக்கோட்டை சாலை, சீனிக்கடை முக்கம் சாலை, அம்புக்கோவில் முக்கம் சாலை, திருவோணம் சாலை, மார்க்கெட் பகுதி, நகை கடை வீதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மற்றும் வணிக நிறுவனங்கள் எதிரே அதிக அளவில் பட்டாசு குப்பைகளை சேகரித்தும் நெகிழி மற்றும் அட்டை குப்பைகளை சேகரித்து அனைத்தையும் தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தி நகர் பகுதி முழுவதும் தூய்மை படுத்தும் பணியில் ஈடுட்டு வருகின்றனர். குப்பைகளை சேகரித்து ஒரே இடத்தில் கொட்டி தரம் பிரிக்கும் பணியிலும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post தீபாவளி பட்டாசு குப்பைகள் அகற்றும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Diwali ,Karambakudi, Puthukottai district ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டையில் நடப்பு கல்வியாண்டிலேயே ஐடிஐ திறக்க வேண்டும்