×

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி உற்சவ விழா துவக்கம்

 

ஊட்டி, நவ‌.15: ஊட்டியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீ கந்தசஷ்டி உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊட்டியில், லோயர் பஜார் சாலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. கோயிலில்  கந்தசஷ்டி உற்சவ விழா நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முதல் நாள் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 2ம் நாள் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மூன்றாம் நாள் உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 19ம் தேதி மதியம் 3.30 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதியன்று மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

The post சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி உற்சவ விழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Gandashashti Utsava Festival ,Subramania Swamy Temple ,Ooty ,Sri Kanthashasti Utsava ,Kandashasti Utsava festival ,
× RELATED திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக...