×

எஸ்ஐ பயிற்சி நிறைவு செய்த 34 பேருக்கு பணி நியமனம்: ஈரோடு எஸ்பி உத்தரவு

 

ஈரோடு, நவ.15: எஸ்ஐ பயிற்சி நிறைவு செய்த 34 பேருக்கு பணி நியமனம் அளித்து ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 34 பேர் எஸ்ஐகளாக கடந்த சில வாரங்களாக பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் 34 பேரும் தாங்கள் பணியாற்றிய போலீஸ் ஸ்டேஷன்களிலேயே எஸ்ஐயாக நியமனம் செய்து எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார். எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றதுடன் பயிற்சி பெற்ற போலீஸ் ஸ்டேஷன்களிலேயே பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பதால் எஸ்ஐக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post எஸ்ஐ பயிற்சி நிறைவு செய்த 34 பேருக்கு பணி நியமனம்: ஈரோடு எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Erode SP ,Erode ,Erode SP Jawahar ,Dinakaran ,
× RELATED ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு