×

காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளையொட்டி, கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நிர்வாகிகள் கோபண்ணா, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவை மறு உருவாக்கம் செய்தவர், இந்தியாவை உலகத்தில் வல்லரசாக மாற்றியவர் ஜவஹர்லால் நேரு. இன்று, காஷ்மீர் இந்தியாவில் இருக்கிறது என்றால் அதற்கு காரணமாக இருந்தவர் நேரு. ஓபிசி சமூகம் வளமாக வாழ்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் நேரு. அவரை போன்ற ஒரு சிற்பி இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. கோயில்களில் அனைவரும் தரிசிக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலில் அனுமதிக்காத கூட்டம் பாஜ கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.

The post காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kashmir ,CHENNAI ,Jawaharlal Nehru ,Guindy Kathibara ,
× RELATED ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர்...