×

குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்: தலைவர்கள் குழந்தைகள் தின வாழ்த்து

சென்னை: ‘குழந்தைகளே நாட்டின் எதிர்காலம், குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்’ என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* ராமதாஸ் (பாமக நிறுவனர்): உலகில் மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும் உயிர்கள் குழந்தைகள். அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்…. ஆனால், குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதனால் தான் எனது பார்வையில் குழந்தைகள் அனைவரும் தெய்வங்கள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் எனக்கு கவலைகளே இருக்காது. மனித வாழ்க்கையில் எல்லாமுமாக இருக்கும் குழந்தைகளை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்.

* அன்புமணி (பாமக தலைவர்): குழந்தைகளை கொஞ்சும்போது நமது கவலைகளை மறக்கச் செய்து, நம்மையும் குழந்தைகளாகவே மாற்றி விடுவதுதான் அவர்களின் சிறப்பு. அதனால் நானே இப்போது அடிக்கடி குழந்தையாக மாறி விடுகிறேன். மகிழ்ச்சியை வாரி வழங்கும் குழந்தைகளை இன்றும், என்றும் போற்றுவோம்.

* டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என பறைசாற்றி, அதற்கான செயல்திட்டங்களையும் வகுத்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகளிடம் அன்புசெலுத்தி அரவணைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றையும் மேம்படுத்தி வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக குழந்தைகளை உருவாக்குவதற்கான உறுதிமொழியை அனைவரும் இந்நாளில் ஏற்போம்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தையொட்டி, நேருவின் பொன்மொழியான ‘இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்: தலைவர்கள் குழந்தைகள் தின வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Children's Day ,Chennai ,Ramadas ,Anbumani ,
× RELATED கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20-ம்...