×

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை

போபால்: மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியானது 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தின் விதிசாவில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். இதில் ராகுல்காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக புயல் வீசப்போகிறது. காங்கிரஸ் 145 முதல் 150 தொகுதிகள் வரை வெல்லும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் காங்கிரஸ் ஆட்சியை தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் பிரதமர் மோடி, எம்பி சிவராஜ் சிங் , அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி உங்கள் அரசை திருடிவிட்டனர். 2020ம் ஆண்டு மார்ச் வரை 15மாதங்கள் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு 27லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால் அந்த அரசை கவிழ்த்ததன் மூலமாக தொழிலாளிகள், விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், வேலையில்லா இளைஞர்களை பாஜ ஏமாற்றிவிட்டது. கர்நாடகா மற்றும் இமாச்சலில் அன்பின் மூலமாக தான் பாஜ ஆட்சியை காங்கிரஸ் வெளியேற்றியது. வெறுப்பினால் இல்லை. இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

The post மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Madhya Pradesh ,Rahul Gandhi ,Bhopal ,Congress party ,Vidisha ,
× RELATED விஜயதாரணி செய்தது தேசத்துரோகம்: ஜோதிமணி எம்.பி. காட்டம்!