×

23 டன் துணியுடன் 3 லாரி எரிந்து சாம்பல்

நாமக்கல்: நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 டாரஸ் லாரிகள், ஒரு டேங்கர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு டாரஸ் லாரி மற்றும் டேங்கர் லாரி காலியாக இருந்தது. மற்றொரு டாரஸ் லாரியில் ஈரோட்டிலிருந்து ஸ்கீரின் துணி, சட்டை துணி, கர்ச்சிப் துணிகளுடன் 23 டன் துணி பண்டல்கள் ஏற்றி வந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரிக்கு கொண்டு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை துணி பண்டல்கள் இருந்த லாரியில் தீப்பற்றி புகை வந்துள்ளது. இந்த தீ மளமளவென பரவி அருகில் நிறுத்தபட்டிருந்த லாரிகளுக்கும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து 3 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் கட்டுப்படுத்தினர். எரிந்து நாசமான துணிகளின் மதிப்பு ரூ.70 லட்சம். லாரிகளின் மதிப்பு தலா ரூ.30 லட்சம்.

The post 23 டன் துணியுடன் 3 லாரி எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal-Salem National Highway ,Dinakaran ,
× RELATED சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்