×

ஓடுதளத்தில் நாய்: பெங்களூரு திரும்பிய விமானம்

பனாஜி: கோவாவில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து கோவா சென்ற விமானம், ஒடுதளத்திற்குள் நாய் வந்ததால் தரையிறங்காமல் திரும்பியது. பெங்களூரு-கோவா செல்லும் விஸ்தாரா விமானம் நேற்று முன்தினம் 12.55 மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டது. கோவாவின் டபோலிம் விமான நிலையதில் விமானம் தரையிறங்க முயற்சித்தது. அப்போது விமான ஓடுபாதைக்குள் திடீரென நாய் ஒன்று வந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் விமானியை தரையிறங்க சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் விமானி பெங்களூரு திரும்ப விரும்பினார். இதனால் விமானம் கோவாவில் தரையிறங்காமல் பெங்ளூருவுக்கு திரும்பியது. இதனை தொடர்ந்து மீண்டும் 4.55மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 6,15 மணியளவில் கோவா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

The post ஓடுதளத்தில் நாய்: பெங்களூரு திரும்பிய விமானம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Panaji ,Goa ,Goa… ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட தடயங்கள் சேகரிப்பு..!!