×

முதுகுளத்தூர் அருகே நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதம்: விவசாயிகள் கவலை

சாயல்குடி: முதுகுளத்தூர் பகுதிகளில் நெற்பயிர்கள், மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழக்குளம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அப்பனேந்தல், கேளல், அ.நெடுங்குளம் பகுதியில் பருவமழையை எதிர்பார்த்து, கடந்த செப்டம்பர் மாதம் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுபாக நடந்து வந்தது.

இந்நிலையில் தற்போது பெய்த மழையால் விவசாய நிலங்களில், மழைநீர் தேங்கியதால் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. தேங்கிய மழை நீர் வெளியேறததால் பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தொடர் மழையால் கண்மாய் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கண்மாய் நீரை வெளியேற்ற முடியாமலும், வயலில் தேங்கிய நீரை வெளியேற்ற முடியாமலும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

The post முதுகுளத்தூர் அருகே நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Mudukulathur ,Chayalgudi ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...