×

பழநி அருகே குதிரையாறு அணையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

பழநி: பழநி அருகே, குதிரையாறு அணைப் பகுதியில் சிறுத்தை நடமாடுவதால், அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவைகள் தண்ணீர் மற்றும் இரை தேடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் வருகின்றன. இதனால், வனவிலங்குகள் வருவதைத் தடுக்க வனத்துறை சார்பில், வனப்பகுதி எல்லைகளில் சோலார் மின்வேலி மற்றும் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பழநி அருகே உள்ள குதிரையாறு அணைப்பகுதியில் சிறுத்தை நடமாடுவது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்ட சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. குடியிருப்புப் பகுதிகளின் அருகில் சிறுத்தையின் நடமாட்டம் கண்டறியப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் மேய்ச்சல் மற்றும் விவசாயத் தொழில்கள் அதிகளவில் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post பழநி அருகே குதிரையாறு அணையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Kodyayar Dam ,Palani ,Kodhyayaru Dam ,Dindigul district ,Kodiyaru dam ,Dinakaran ,
× RELATED பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா திருக்கல்யாணம்